4 கொலைகள் செய்ததாக கூறி 4 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனை விதித்த எகிப்து நீதிமன்றம்
எகிப்தில் 4 கொலைகள் செய்ததாக கூறி 4 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கொய்ரா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எகிப்தில் அகமது மன்சூர் கர்னி என்ற 4 வயது சிறுவன் 4 கொலைகள் செய்ததாக அவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு அகமது 2 வயது இருக்கும் போது 4 கொலைகள் செய்துள்ளதாகவும் அரசு சொத்துக்களை சேதம் செய்து மற்றும் சட்ட ஒழுங்கிற்கு குந்தகம் விளைவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் 115 பேருடன் அகமது பெயரும் சேர்க்கபட்டது. அகமது பிறப்பு சான்றிதழ் பாதுகாப்பு படையிடம் அளிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் அந்த வழக்கு ராணுவ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. சிறுவன் நீதிமன்றத்தில் ஆஜராகாமலேயே அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பில் அகமதுவின் பெயர் சேர்க்கப்பட்டதில் தவறு ஏற்ப்பட்டதாக நீதிமன்ற தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.




