செய்திகள்
அநுராதபுர சிறைசாலையில் அரசியல் கைதிகள் இருவர் உண்ணாவிரத போராட்டத்தில்
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இருவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று திங்கட் கிழமை காலை முதல் குறித்த கைதிகள் இருவரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளை விடுவிக்குமாறும் மற்றும் தம்மீதான விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் கோரியே இருவரும் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




