செய்திகள்
பேலியகொடையில் துப்பாக்கி பிரயோகம் : இருவர் காயம்
கொழும்பு பேலியகொட பகுதியில் இனந்தெரியாத இருவரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவலகள் தெரிவிக்கின்றன.
நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிதாரிகள் வேறு நபர் ஒருவரை குறிவைத்தே துப்பாக்கி சூடு நடத்தியிருக்கலாம் எனவும் ஆனால் குறி தவறி இவர்கள் இருவரும் காயமடைந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர் இது வரை சந்தேக நபர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.




