ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கையில்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் டகெஹிகோ நகாஓ நேற்று இரவு இலங்கையை வந்தடைந்தார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த நகாஓவை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க வரவேற்றார்.
அரசாங்கம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கிடையில் இன்றைய தினம் பல உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன.
சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் உற்பத்தியாளர்களை கட்டியெழுப்பும் திட்டங்களுக்கு அமைவாக இந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளதாக நிதியமைச்சர் கூறினார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இரண்டு நாட்கள் நாட்டில் தங்கியிருக்கவுள்ளார்.
n10




