செய்திகள்
சம்பூரில் கடற்படை முகாமொன்றை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல தீர்மானம் : அஜித் பி பெரேரா
சம்பூரிலுள்ள கடற்படை முகம்களில் ஒன்றை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல திடட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.
அந்த பகுதியில் மூன்று கடற்படை முகாம்கள் இருந்ததாகவும் எவ்வாறாயினும் அதில் ஒன்றை அங்கிருந்து மூன்று கிலோ மீற்றர் பகுதிக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சம்பூர் அனல் மின்நிலையம் தொடர்பான இந்தியாவுடனான ஒப்பந்த்தில் காணப்படும் பாரதூரமான விடயங்களில் திருத்தங்களை மேற்கொண்டு புதிதாக ஒப்பந்தமொன்றை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
n10




