செய்திகள்
அரசியலமைப்பு பேரவை தொடர்பான ஶ்ரீ.ல.சு.கவின் யோசனையை ஐ.தே.க ஏற்றுக்கொண்டது : அஜித் பி பெரேரா
புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கான அரசியலமைப்பு பேரவையை அமைப்பது தொடர்பாக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் முன் வைக்கப்பட்ட சகல திருத்தங்களையும் ஐக்கிய தேசிய கட்சி ஏற்றுக்கொண்டுள்ளதாக பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த பேரவையை அமைப்பது தொடர்பாக யோசனை பிரதமரினால் கடந்த ஜனவரி மாதத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அது தொடர்பான விவாதம் விரைவில் நடக்கவுள்ளது. இந்நிலையில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சில திருத்தங்களை முன்வைத்துள்ளது. அவற்றை எமத கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது. என அவர் தெரிவித்துள்ளார்.
n10




