செய்திகள்

வவுனியா மாணவி படுகொலை: வடக்கில் இன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு

வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவி வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டிக்கும் முகமாக புதன்கிழமை வடக்கில் ஹர்த்தாலுக்கு  அழைப்பு  விடுக்கப்பட்டு  உள்ளது.

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், வவுனியா, யாழ்ப்பாணம் வர்த்தகர் சங்கங்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் ஒன்றிணைந்து ஹர்த்தாலுக்கு  அழைப்பு விடுத்துள்ளனர்.

அதேவேளை யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியமும் ஹர்த்தாலுக்கு தமது பூரண  ஆதரவை வழங்கவுள்ளதாகவும் , வியாழக்கிழமை பல்கலைகழக மாணவர்கள் ஒன்றினைந்து பாரிய கண்டன போராட்டத்தை பல்கலைகழக வளாகத்தினுள் முன்னெடுக்க உள்ளதாகவும் யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவித்து உள்ளனர்.
R-06