செய்திகள்
திலங்க – அர்ஜுன மோதலை தீர்த்துவைக்க ஜனாதிபதி முயற்சி
திலங்க சுமதிபால இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கும் திலங்க சுமதிபாலவுக்கும் இடையே இடம்பெற்று வரும் கருத்து மோதல் விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு தீர்த்து வைக்க முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திலங்க சுமதிபால குறித்த பதவிக்கு தகுதியற்றவர் என தெரிவித்து அர்ஜுன ரணதுங்க அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளார்.
இதன்போது இந்த பிரச்சினை தொடர்பாக இருவரையும் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவையும் அழைத்து கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி திர்மானித்துள்ளார்.




