செய்திகள்

மெகசின் சிறைச்சாலையில் 14 தமிழ் கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தில்

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 14 பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று பகல் முதல் இவர்கள் இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தமது விடுதலையை வலியுறுத்தியே இவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை நேற்று முன்தினம் முதல் அநூராதபுர சிறைச்சாலையிலுள்ள தமிழ் கைதிகள் இருவரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.