செய்திகள்

நியூசிலாந்து பிரதமர் இலங்கை வந்தார்

நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று அதிகாலை இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இவரை விமான நிலையத்திலிருந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.
எதிர்வரும் 25ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்திக்கவுள்ளதுடன்  வர்த்தக சமூக பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இதேவேளை கொழும்பில் நடைபெறவுள்ள வர்த்தக சபைக் கூட்டத்திலும் மற்றும் சர்வதேச ஜனநாயக குழுவின் நிறைவேற்று சபை கூட்டத்திலும் அவர் கலந்துக்கொள்ளவுள்ளார்.
நியூசிலாந்து பிரதமரின் இலங்கை விஜயமானது இருநாடுகளுக்குகிடையிலான அரசியல் மற்றும் வர்த்தக , பொளுதார உறவுகளை வலுப்படுத்தும் வகையிலானது என வெளி விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.