ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இன மக்களும் சமமாக வாழ்வதற்கான ஒர் முதற்படியாக புதிய அரசியலமைப்பு அமையவேண்டும்
ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இன மக்களும் சமமாக வாழ்வதற்கான ஒர் முதற்படியாக புதிய அரசியலமைப்பு அமையவேண்டும் என அரசியலமைப்பு சபை நியமனம் தொடர்பாக பாராளுமன்றத்தில்இடம்பெற்ற விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்காந்தராசா தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு சபை நியமனம் தொடர்பாக பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அங்கு உரையாற்றிய அவர்;
தமிழ் மக்கள் கடந்த அரைநூற்றாண்டு காலமாக இலங்கை அரசியலின் எதிர்மறையான விளைவுகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் பிரித்தானியரிடமிருந்து இலங்கையின் சுதந்திரத்துக்காக போராடிய தமிழ் மக்களின் உரிமைகள் தூரநோக்கற்ற அரசியல் சிந்தனைகளால் மறுக்கப்பட்டு வந்துள்ளது 1972 மற்றும் 1978ம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்புக்கள் இனங்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்துவதில் பாரிய பங்காற்றியிருக்கின்றன.
எமது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இளைஞர்களின் உரிமைப்போராட்டங்களிற்கு இவ்வாறான செயற்பாடுகளே காரணமாக இருந்தன என்பதை சகலரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றார் மேலும் உரையாற்றிய அவர் பதிதாக உருவாக்கப்பட இருக்கின்ற அரசியல் யாப்பு நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டு வந்துள்ள தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிவர்தி செய்யக்கூடிய வகையில் உருவாக்கப்ட வேண்டும்.
சுதந்திரம் அடைந்த காலம்முதல் இந்த நாட்டில் சிறுபான்மை இனங்கள் சமமாக மதிக்கப்படாது இருப்பதற்கான காரணிகள் கண்டறியப்படவேண்டும் எனவே அவற்றை கண்டறிந்து மக்களிடையே சமத்துவம் நிலவுவதற்கான நிலையை இவ் அரசியலமைப்பினூடாக மேற்கொள்ளவேண்டும்.
எனவே கடந்தகாலங்களில் இனலாத மற்றும் மதவாத சிந்தனைகளுக்குள் கட்டுண்ட நிலையிலிருந்து மாறி பிற்போக்கு வாத சக்திகளின் கருத்துக்களை புறந்தள்ளி தமிழ் பேசும் மக்களின் கோரிக்கைகள் கருத்தில் எடுக்கப்பட வேண்டும் தற்போது பெறப்பட்டு வருகின்ற மக்களின் கருத்துக்கள் வெறுமனே கருத்துக்களை மட்டும் பெறும் நிகழ்வாக இருக்காது மக்களின் மனவெளிப்பாடுகளை இவ் அரசாங்கம் புரிந்து ஐக்கிய இலங்கைக்குள் சகல மக்களும் சம உரிமைகளுடன் வாழ்வதற்கு ஏற்றவகையில் தூரநோக்கோடு உருவாக்கப்படல் வேண்டும் எனவும் தெரிவித்தார்.
n10




