செய்திகள்
வவுனியாவில் மாணவி ஹரிஸ்ணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு முழுமையாக ஹர்த்தால்
வவுனியாவில் கடந்த 16 ஆம் திகதி வன்புனர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட மாணவி ஹரிஸ்ணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு இன்று பூரண ஹர்த்தால் இடம்பெறுகிறது.
வர்த்தகநிலையங்கள், பாடசாலைகள், சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன், தனியார் பேரூந்து, முச்சக்கர வண்டிகள் என்பனவும் சேவையில் ஈடுபடவில்லை. இதனால் வவுனியா நகரப்பகுதி எங்கும் வெறிச்சோடிக் காணப்படுகின்றது. இலங்கை போக்குவரத்துச் சேவையின் பேரூந்துகள் தூர இடத்திற்கான தமது சேவையை வழங்கி வருகின்றது.
வவுனியாவில் சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டு இயல்புநிலை காணப்படுகின்றது.
n10







