செய்திகள்
நேற்றைய மின் தடை தொடர்பாக பிரதமர் அறிக்கை கோரினார்
நாடுபூராகவும் நேற்று மாலை திடீரென மின்சார தடையேற்பட்டமை தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மின்சார சபையிடமிருந்து அறிக்கையொன்றை கோரியுள்ளார்.
குறித்த சம்பவமானது யாரேனும் குழப்பும் நோக்கில் செய்த ஒன்றா அல்லது உண்மையில் மின்னல் தாக்கியதால் ஏற்பட்டதா என அறிக்கை சமரப்பிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை மின்சார அமைச்சரும் இது தொடர்பாக அறிக்கையொன்றை கோரியுள்ளார்.
நேற்று பிற்பகல் 2 மணி முதல் சில மணி நேரங்களுக்கு நாடு பூராகவும் மின்சார தடையேற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




