செய்திகள்

நீர்ப்பாசனத் திணைக்கள வீதிகள் புனரமைப்பதற்கு நான்காயிரம் மில்லியன் தேவை

முல்லைத்தீவு மாவட்டத்தின் நீர்ப்பாசனத் திணைக்கள வீதிகள் புனரமைப்பதற்கு நான்காயிரம்  மில்லியனுக்கும் மேற்பட்ட நிதி தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன்கட்டு வவுனிக்குளம் உடையார்கட்டுக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கூடுதலான வீதிகள் நீர்ப்பாசனத்திணைக்களத்திற்கு சொந்தமான வீதிகளாக காணப்படுகின்றன.
கடந்த முற்பது ஆண்டுகளுக்கு மேலாக குறித்த வீதிகள் எந்தவித புனரமைப்புக்களும் இன்றிக் காணப்படுகின்றன.
அத்துடன் கூடுதலான வீதிகள் பயன்படுத்த முடியாத நிலையில் அழிவடைந்துள்ளன.
இவ்வாறு வீதிகள் சேதமடைந்து அழிவடைந்தும் காணப்படுவதனால் விவசாயிகள் தமது பயிர் செய்கை காலங்களில் விவசாய உள்ளீடுகளையும் விளை பொருட்களையும் கொண்டு செல்வதிலும் குறிப்பாக இவ்வீதிகளை பயன்படுத்தும் மக்களும் அன்றாடம் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவ்வீதிகளின் புனரமைப்பு பணிகள் தொடர்பாக கருத்து தெரிவித்த நீர்ப்பாசனத் திணைக்களம் குறித்த திணைக்களத்திற்குச் சொந்தமான வீதிகளைப் புனரமைப்பதற்கு நான்காயிரம் மில்லியன் ரூபா நிதி தேவையாகவுள்ளதாகவும் உடனடியாக மாந்தை கிழக்கு துணுக்காய் உடையார்கட்டு முத்தையன்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வீதிகளை புனமைக்க உடனடியாக ஆயிரத்து 500 மில்லியன் ரூபா நிதி தேவையாகவுள்ளதாக தெரிவித்துள்ளது.
n10