செய்திகள்

ஏழாயிரத்து 651 ஏக்கர் நிலப்பிரப்பில் காலபோக நெற் செய்கை

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாண்டியன்குளம் கமநலசேவை நிலையத்தின் கீழ் இவ்வாண்டு ஏழாயிரத்து 651 ஏக்கர் நிலப்பிரப்பில் காலபோக நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டு தற்போது அறுவடை மேற்கொள்ளப்பட்டு வருகின்;றது.
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாண்டியன்குளம் கமநலசேவை நிலையத்தின் கீழ் உள்ள பாரிய நீர்ப்பாசன குளமான வவுனிக்குளத்தின் கீழ் 5 ஆயிரத்து 182 ஏக்கரும் பனங்காமம் குளத்தின்கீழ் 400 ஏக்கரிலும் கொல்லவிளாங்குளத்தின் கீழ் 262 ஏக்கரிலும் என மொத்தமாக ஐயாயிரத்து 844 ஏக்கர் காலபோக நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதேவேளை 31 சிறிய குளங்களின் கீழ் ஐநூற்றி 87 அரை ஏக்கரிலும் 220 ஏக்கர் மானாவாரி செய்கையாகவும் என இவ்வாண்டு ஏழாயிரத்து 651 ஏக்கர் நிலப்;பரப்பில் காலபோக நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டு தற்போது மானாவாரி நிலங்கள் மற்றும் சிறிய நடுத்தர குளங்கள் பாரிய நீர்ப்பாசனக்குளங்கள் ஆகியவற்றின் கீழான நெற் செய்கைகள் அறுவடை செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அறுவடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளபோதும் நெல்லை உரிய விலைகளில் சந்தைப்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் இப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
n10