செய்திகள்

ஐந்தாவது நாளாக தொடரும் தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம்

கொழும்பு புதிய மெகசின் மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனுராதபுரம் சிறைச்சாலையில் இரண்டு கைதிகளும், கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் 14 கைதிகளும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும், ஊடகப் பேச்சாளருமான துஷார உபுல்தெனிய குறிப்பிட்டார்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த நான்கு கைதிகள் சுகவீனமுற்ற நிலையில் சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

தங்கள் மீதான நீதிமன்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கோரி அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கடந்த திங்கட்கிழமை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உண்ணாவிதப் போராட்டத்தை கைவிடுமாறு இந்த கைதிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டபோதிலும் அவர்கள் அதனை நிராகரித்ததாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த கைதிகள் மீது தொடரப்பட்டுள்ள வழக்கின் ஆவணங்களை சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைத்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய மேலும் கூறினார்.

n10