செய்திகள்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி,அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் வருடாந்த மாநாடு நாளை

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் வருடாந்த மாநாடு நாளை  சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாடு யாழ்ப்பாணம் சட்டநாதர் கோவில் வீதியிலுள்ள இளம்கலைஞர் மண்டபத்தில் நாளை   முற்பகல்  10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக இரு கட்சிகளின் பொதுச் செயலாளர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும்  செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விபரங்களுக்கு 0773024316 மற்றும் 0776068834 என்ற கைபேசியுடனும் 0212223739 என்ற தொலைபேசியுடனும் தொடர்புகொள்ள முடியுமெனவும் தெரிவித்துள்ளனர்.
n10