செய்திகள்
வவுனியா விபுலானந்த கல்லூரி மாணவி ஹரிஸ்ணவியின் படுகொலையை கண்டித்து மன்னாரில் போராட்டம் தொடர்கிறது
பாலியல் வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட வவுனியா விபுலானந்த கல்லூரி மாணவி ஹரிஸ்ணவியின் படுகொலையை கண்டித்து மன்னாரில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாடு செய்யப்பட்ட கவயீர்ப்பு போராட்டத்தை அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமைதாங்கினார்
இந்நிகழ்வில் வட மாகாண கடற்றொழில் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், வட மாணசபை உறுப்பினர் ஞானசீலன் குணசீலன்,வட மாகாண கடற்றொழில் சமாசத்தின் தலைவர் எம்இஎன்.ஆலம், முன்னாள் மன்னார் நகரசபையின் தலைவர் எஸ்.ஞானபிரகாசம், மத பெரியார்கள்,அரச சார்பற்ற நிறுவங்களின் அதிகாரிகள்,சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்
இதன்போது வவுனியா விபுலானந்த கல்லூரி மாணவி ஹரிஸ்ணவியின் படுகொலையை கண்டித்தும், குறித்த குற்றசெயலில் ஈடுபட்டவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டணைவழங்க வேண்டும் எனவும், மேலும் இவ்வாறான வன்கொடுமைகள் நடபெறாது இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்ப போராட்டம் நடைபெற்றது
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தின் இறுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மகஜர் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
n10








