தனக்கு வழங்கப்பட்ட விளக்க மறியல் தண்டனைக்கு எதிராக ஞானசார உயர் நீதிமன்றத்தில் மனு
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
தனக்கு ஹோமாகம நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட விளக்க மறியலுக்கான உத்தரவு சட்டத்திற்கு விரோதமானது என அறிவிக்குமாறு கோரியே அவர் அந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
தான் எக்னலிகொடவின் மனைவிக்கு அச்சுறுத்தல் விடுக்கவில்லையெனவும் ஆனால் நீதிமன்றத்தினால் தனக்கு அநீதியான வகையில் விளக்க மறியல் வழங்கப்பட்டதாகவும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஞானசார தேரர் நேற்று முன்தினம் விளக்க மறியலிலிருந்து பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
n10




