செய்திகள்
வாகனங்களில் அதிக ஒலியெழுப்பும் நபர்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை
வாகனங்களில் அதிக சத்தங்களுடன் ஒலியெழுப்பும் (ஹோர்ன்) வாகன உரிமையாளர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் நடவடிக்கையெடுக்கவுள்ளதாக மத்திய சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறிப்பாக பஸ் , லொரி உள்ளிட்ட வாகனங்களில் காணப்படும் காற்று அழுத்தத்தின் மூலம் இயங்கும் ஒலியெழுப்பும் கருவிகளிலிருந்து வெளியேறும் சத்தம் சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி எதிர்காலத்தில் ஒலியெழுப்பும் கருவிகள் தொடர்பாக புதிய சட்ட திட்டங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அந்த அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.
n10




