செய்திகள்
மஹிந்தவின் பாதுகாப்பு பிரதானியின் காணியில் சீ.ஐ.டியினர் சோதனை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரதானியாக செயற்பட்ட நெவில் வன்னியாராச்சி என்பவரின் வீரகெட்டியவில் காணப்படும் காணியில குற்றப் புலனாய்வு பிரிவினர் தற்போது சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வளஸ்முல்ல நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவர்கள் அங்கு சோதனை நடவடிக்கையில் ஈடுபடுவவதாகவும் இதன்போது பெகோ இயந்திரங்கள் மூலம் குழிகள் தோண்டப்பட்டு சோதனையிடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தென்னம் தோட்டமான குறித்த காணி சில வாரங்களுக்கு முன்னர் சுத்தம் செய்யப்பட்டு குழிகள் தோண்டப்பட்டதாகவும் இது தொடர்பாக குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்ததாகவும் இதன்படியே அங்கு சோதனை நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
n10




