கறுப்பு உடையில் கிளர்ச்சி ஊட்டும் ஸ்ரீதேவியின் மகள் ‘குஷி கபூர்’
இந்திய திரை உலகை ஆட்சி செய்த நடிகை ஸ்ரீதேவி எவ்வாறு சிறு வயதாக இருக்கும்போதே தனது கொள்ளை அழகால் பிரபல்யமாக இருந்தாரோ அதேபோலவே அவரது 15 வயது இளைய மகள் குஷி கபூரும் பிரபல்யம் அடைந்துள்ளார். ஸ்ரீதேவி சிறு வயதிலேயே திரைப்படங்களில் தோன்றி பிரபல்யம் அடைந்தார். ஆனால், சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான படங்களை போட்டு பிரபல்யம் அடைந்துள்ளார் குஷி கபூர்.
இந்தியாவின் சகல மொழி ஊடகங்களும் குஷி கபூரை பற்றி சமீப காலமாக போட்டி போட்டு எழுதி வருவதுடன் அவரது படங்களை பிரசுரித்து வருகின்றன. சில தினங்களுக்கு முன்னர் குஷி கபூர் தனது Instagram சமூக வலைத்தளத்தில் கறுப்பு நிறத்தில் ஒரு கவர்ச்சியான படத்தை பதிவேற்றினார். இந்த படத்தை பிரசுரித்து இந்திய ஊடகங்கள் அவரது அழககை வர்ணித்துள்ளன.
அவரது இந்த படத்தை பிரசுரித்து பிரபல ஊடகம் ஒன்று கீழ்வருமாறு எழுதி இருக்கிறது:
“நாகரிக உடை மற்றும் பாணி ( fashion and style) என்று வரும்போது ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் தனது சகோதரி ஜானவிக்கு வீட்டில் கடும் போட்டியை ஏற்படுத்துகிறார். ஒரு வருடத்துக்கு முன்னர், சிறு பிள்ளை போல இருந்த குஷி கபூர் இப்போது ஒரு புது தளிராக மலர்ந்து அனைவராலும் பேசப்படுகிறாள். தனது Instagram இல் கறுப்பு நிற கவர்ச்சி உடை அணிந்து அவர் இட்டுள்ள படம் ‘ பிரபலங்கள்’ வாழ்வுக்குள் அவர் நுழைவதை தெளிவாக காட்டுகிறது. தனது நீண்ட கால்களுடன் கறுப்பு உடையில் அவரது படம் மிகவும் கவர்ச்சியாக இருப்பதுடன் அவரது தன்னம்பிக்கையை காட்டுவதாகவும் இருக்கிறது. இந்த படம் வீட்டில் ஜானவிக்கு நிச்சயமாக கடும்போட்டியை ஏற்படுத்தும்”.










