செய்திகள்
ராஜிதவை பார்க்க மைத்திரி சிங்கப்பூர் பயணம்
சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூருக்கு பயணமாகியுள்ளார்.
இன்று காலை ஜனாதிபதி அங்கு பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வாரம் திடீரென சுகவீனமடைந்த நிலையில் ராஜித சேனாரட்ன சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு அங்கு சத்திரச் சிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவரின் உடல் நிலை தேரியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
n10




