தமிழ் அரசியல் கைதிகள் இருவரின் விசாரணை வவுனியா நீதிமன்றால் ஒத்திவைப்பு!
தமிழ் அரசியல் கைதிகள் இருவரின் விசாரணை வவுனியா நீதிமன்றால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், விடுதலை கிடைக்கும் என எதிர்பார்த்த தமக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான விசாரணை நேற்று வெள்ளிக்கிழமை வவுனியா நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்டு கடந்த பல வருடங்களாக எந்தவித முடிவுகளும் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளான அ.மரியசீலன், எஸ்.ராஜன் ஆகியோர் மீதான விசாரணை நடைபெற்றது.
இதில் எஸ்.ராஜன் அவர்களின் மீதான விசாரணை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கும், அ.மரியசீலன் மீதான விசாரணை ஏப்ரல் 27 ஆம் திகதிக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, நீதிமன்றத்தின் ஊடாக பிணை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்திருந்த உறவினர்கள் ஏமாற்றதுடனம், அழுகையுடனும் வீடு திரும்பினர்.
n10




