ஊழல், மோசடி, பொய், களவு எதனையும் நான் செய்யவில்லை!– சுமணதாச தெரிவித்துள்ளார்
சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்…
சிலர் என்னைப் பற்றி பிழையான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். எனக்கோ, எனது ஜோதிட நிறுவனத்திற்கோ அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கோ அபாண்டமான குற்றச்சாட்டுக்களை எவராலும் சுமத்த முடியாது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் எதுவும் உண்மையில்லை. சட்டவிரோதமான முறையில் வங்கிகளில் கடன் பெற்றுக்கொண்டதில்லை. யாரேனும் அவ்வாறான குற்றச்சாட்டு சுமத்தியிருந்தால் அது பிழையான ஓர் குற்றச்சாட்டாகவே கருதப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.




