செய்திகள்

எம்.பிக்களின் கேள்விக்கு பதிலளிக்காத அமைச்சர்கள் பற்றி பிரதமரிடம் முறைப்பாடு!–சபாநாயகர்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காத அமைச்சர்கள் பற்றி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் முறைப்பாடு செய்யப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க துறைசார் அமைச்சர்கள் பிரசன்னமாகியிருக்காமை குறித்து முறைப்பாடு செய்யப்படும் என அவர் நேற்று நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் பதிலளிப்பதற்காக அமைச்சர்களின் பிரசன்னம் குறித்து திருப்தி அடைய முடியாது.

இதேவேளை, அமைச்சர்கள் நாடாளுமன்றில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்காமை குறித்து வருந்துவதாக அவைத்து தலைவர் லக்ஸ்மன் கிரியல்லவும் தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி.யின் தலைவர் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் அமைச்சர்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பதில்லை என குற்றம் சுமத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

n10