செய்திகள்
நெலுந்தெனியவில் வாகன விபத்து – 11 பேர் கேகாலை வைத்தியசாலையில்
இன்று (27) அதிகாலை கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேன் ஒன்று தெதிகம – நெலுந்தெனிய 66ம் இலக்க கிலோ மீற்றர் தூண் அருகில் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த டிபர் வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் படு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
காயமடைந்த 11 பேரும் கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த இவர்களில் 5 பேர் பெண்கள் எனக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
n10




