செய்திகள்

தொடரும் அரசியல் கைதிகளின் போராட்டம்

உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளில் நான்கு பேர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை செய்யக் கோரி நடத்தப்படுகின்ற அவர்களின் உண்ணாவிரதப் போராhட்டம் 6வது நாளாகவும் இடம்பெறுகிறது.

இதுவரையில் 5 பேரின் உடல் நிலை மோசமடைந்திருப்பதாகவும் அவர்களில் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளின் இந்தப் போராட்டம் குறித்து சட்டமா அதிபருக்குத் தெரியப்படுத்தியிருப்பதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

 n10