செய்திகள்
5, 13 வயது இரு சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம்! வவுனியாவில் சம்பவம்…..!
வவுனியாவில் ஹரிஸ்ணவியின் மரணத்திற்கு பின்னர் 5, 13 வயது இரு சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசில் மறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா, தரணிக்குளம் பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை ஆரம்பத்துள்ளனர்.
இதேவேளை, வவுனியா, கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியைச் சோந்த 5 வயது சிறுமி ஒருவர் மீதும் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை கனகராயன்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
N5




