செய்திகள்

தான் குற்றம் செய்யவில்லை : தன்னை கைது செய்யப்போவதாக வெளியாகும் தகவல்கள் தொடர்பாக நாமல் கருத்து

தாஜுதீன் கொலை தொடர்பாக தான் கைது செய்யப்படவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் தொடர்பாக நாமல் ராஜபக்‌ஷ கருத்து வெளியிட்டுள்ளார்.
தானது குடும்பத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்தும் பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு பழிவாங்கப்படுவதாகவும் எவ்வாறாயினும் தனது குடும்பத்தார் குற்றம் செய்யவில்லையென்ற உண்மை விரைவில் வெளி வருமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எத்தகைய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் தாம் குற்றம் செய்யாத காரணத்தினால் எதற்கும் அஞ்சப்போவதில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாமல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
n10