செய்திகள்

யாழ்ப்பாணம் வேலனையில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று….!

காணாமற் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மூன்றாம் கட்ட விசாரணைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை வேலனை பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளன.

யாழ்ப்பாணம் – கோப்பாயில் நேற்று சனிக்கிழமை ஆரம்பமாகிய ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று வேலனை பிரதேச சேயலகத்திலும் நாளை மற்றும் நாளை மறுதினமும் சாவகச்சேரி பிரதேச செயலகத்திலும் நடைபெறவிருக்கின்றன.

கடந்த டிசம்பர் மாதம் குறித்த அமர்வுகளின் இரண்டாம் கட்ட விசாரணைகள் இடம்பெற்றிருந்தது.

இதன்போது யாழ். மாவட்டத்தில் விசாரணைகள் இடம்பெறாத பிரதேச செயலக பிரிவுகளில் தற்போது குறித்த அமர்வுகள் இடம்பெற்று வருகின்றன.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தலைமையில் கோப்பாய், பருத்தித்துறை, கரவெட்டி ஆகிய பகுதிகளிலிருந்து விசாரணைக்கு அழைக்கப்பட்ட 232 பேருக்கான விசாரணைகள் யாழ். கோப்பாய் பிரதேச செயலகத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

ஐந்து பிரிவுகளாக இடம்பெற்ற இந்த விசாரணையில் காணாமல் போனோருடைய உறவினர்கள் தமது உறவுகள் தொடர்பில் சாட்சியமளித்தனர்.

கோப்பாயில் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் இந்த அமர்வுகள் நடைபெறவுள்ளன.

அந்தவகையில் கோப்பாய், வேலணை, சாவகச்சேரி ஆகிய பிரதேச செயலகங்களில் இடம்பெறவுள்ளதுடன், குறித்த பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளிலிருந்து எழுநூற்று எழுபத்தி இரண்டு பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் புதிய முறைப்பாடுகளை பதிவு செய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றது.

இன்று ஞாயிற்றுகிழமை வேலணை, ஊர்காவற்துறை, காரைநகர், நெடுந்தீவு ஆகிய பிரதேசங்களை சேந்தவர்களுக்கு வேலணை பிரதேச செயலகத்திலும்,

நாளை 29 ஆம் திகதி மருதங்கேணி மற்றும் சாவகச்சேரி பிரதேச பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு சாவகச்சேரி பிரதேச செயலகத்திலும் மறுநாள் மார்ச் மாதம் 01 ஆம் திகதி சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்குட்பட்டவர்களுக்கு சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் இந்த அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

N5

N5