ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை இலங்கை தூதரக அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம்
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யக்கோரி சென்னையில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டு நாளை போராட்டம் நடத்துகிறார்கள்.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த 27 மீனவர்களையும், 79 படகுகளையும் விடுவிக்க வேண்டும். இலங்கை நீதிமன்றம் விடுவித்து கடலில் மூழ்கி சேதமடைந்த 18 படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்கு மத்திய–மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக நாளை திங்கட்கிழமை சென்னையில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். இதில் பங்கேற்பதற்காக ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் ஆகிய பகுதிகளை சேர்ந்த 200–க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று மாலையில் பஸ் மற்றும் ரெயிலில் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்கள்.
n10




