செய்திகள்

229 பேரிடம் யாழ் வேலணை பிரதேச செயலககத்தில் வாக்கு மூலங்கள் பதிவு

காணாமற்போனோர் தொடர்பில் யாழ் வேலணை பிரதேச செயலககத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட அமர்வில் 229 பேரிடம் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

காணாமல் போனோர் தொடர்பில் முறைப்பாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் யாழ் மாவட்டத்திற்கான மற்றுமொரு அமர்வு வேலணை பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

இன்றைய அமர்விற்கு 193 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததுடன் அவர்களில் 159 பேர் சாட்சியமளிக்க வருகை தந்திருந்ததாக ஆணைக்குழுவின் செயலாளர் எச். டபிள்யூ. குணதாச குறிப்பிட்டார்.

இதேவேளை, இன்றைய அமர்வில் 70 புதிய முறைப்பாடுகள் குறித்தும் சாட்சி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இன்றைய தினம் ஊர்காவற்துறை, நயினாதீவு, நெடுந்தீவு ,வேலணை மற்றும் காரைநகர் பிரதேச செயலகங்களைச் சேர்ந்த காணாமல் போனோரின் உறவினர்களிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்தகட்ட சாட்சி விசாரணை சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் நாளை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

n10