செங்கை ஆழியான் காலமானார்
ஈழத்தின் இலக்கிய ஜாம்பவான், வரலாற்றுப் படைப்பாளி .பல வாசக நெஞ்சங்களின் அபிமான படைப்பாளி செங்கை ஆழியான் அவர்கள்
இன்று மதியம் யாழ்ப்பாணம் பிரவுண் வீதியிலுள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார்.
இறக்கும் போது அவருக்கு வயது 75.
1941 ஜனவரி 25ஆம் திகதி பிறந்த அவர், பல நூல்களை எழுதி வெளியிட்டு ஈழத்து இலக்கிய வரலாற்றில் அழியாத் தடம் பதித்தவர். சிறுகதைகள், நாவல்கள், வரலாற்று ஆய்வு நூல்கள் எனப் பல நூல்களை எழுதி வெளியிட்டுச் சாதித்துள்ளார்.
அவரது வாடைக் காற்று மற்றும் புதினம் ஆகிய படைப்புக்கள் திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டன.
அத்துடன், அரசாங்க அதிபராகவும் அரச சேவையிலிருந்து ஓய்வுபெறும் முன்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பதிவாளராகவும் இவர் கடமையாற்றினார்.
n10




