வவுனியாவில் 11 வயது சிறுமி வன்புனர்வு தொடர்பில் இருவர் கைது
வவுனியா, தரணிக்குளம் பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்புனர்வு செய்யப்பட்டமை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்று வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, தரணிக்குளம் பகுதியைச் சோந்த 11 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்புனர்வுக்கு உட்பட்டுள்ளதாக வவுனியா பொலிசில் நேற்றைய தினம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா பொலிசார் சிறுமியை வன்புனர்வு செய்தமை தொடர்பில் அப் பகுதியைச் சோந்த இருவரை கைது செய்துள்ளனர். இவர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான வேலைகள் இடம்பெறுவதாக வவுனியா பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, கடந்த 16 ஆம் திகதி ஹரிஸ்ணவி என்ற மாணவி வன்புனர்வுக்குட்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கனகராயன்குளம், தரணிக்குளம் ஆகிய பகுதிகளில் இரு சிறுமிகள் இதுவரை வன்புனர்வுக்குட்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
N5




