செய்திகள்
கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறியுள்ள குடும்பங்களில் 4 220 குடும்பங்களுக்கு காணியில்லை
கிளிநொச்சி மாவட்டத்தில் நான்காயிரத்து 220 குடும்பங்கள் காணிகள் அற்ற குடும்பங்களாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறியுள்ள குடும்பங்களில் நான்காயிரத்து 220 குடும்பங்கள் காணிகளற்ற குடும்பங்களாக காணப்படுகின்றன.
அதாவது கரைச்சிப்பிரதேச செயலர் பிரிவில் மூவாயிரத்து 160 குடும்பங்களும் கண்டாவளைப்பிரதேசத்தில் 956 குடும்பங்களும் பூநகரி பிரதேசத்தில் 72 குடும்பங்களும் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் 32 குடும்பங்களும் என சுமார் நான்காயிரத்து 220 குடும்பங்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் காணிகளற்ற குடும்பங்களாக காணப்படுகின்றன.
இவ்வாறு காணிகளின்றி காணப்படுகின்ற குடும்பங்கள் வீட்டுத்திட்டங்களையும் ஏனைய நிலையான வாழ்வாதாரத் தேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளன.
n10




