செய்திகள்
பெண்களின் பாதுகாப்பை துரிதகதியில் செயற்படுத்தவும் : மன்னார் ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் அமைப்பு அரசுக்கு கோரிக்கை
பெண்கள் மற்றும் சிறுவர்கள் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்படும் வன்முறைகள் நாட்டில் அதிகரித்துவரும் நிலையில் அதணை கண்டித்தும் குறித்த சட்டவிரோத செயல்களை உடனடியாக தடுக்கும் வகையில் நடவடிக்கையிணை மேற்கொள்ளவும் வலியுறுத்தி இன்று திங்கள்கிழமை (29) மன்னாரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மன்னார் மாவட்ட மாதர் அமைப்பின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த குறித்த நிகழ்விற்கு அதன் மன்னார் மாவட்ட இணைப்பாளர் மகாலட்சுமி கருசாந்தன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டமானது மன்னார் பிரஜைகள் குழு அலுவலக வளாகத்திலிருந்து இன்று காலை 9:45 மணியளவில் ஆரம்பிக்கப்படது. இதன்போது பெண்கள் கைகளில் சுலோகங்களை ஏந்தியவாறு கோசங்களுடன் பேரணியாக சென்று மன்னார் பிரதான வீதியை அடைந்து அங்கிருந்து மன்னார் நகரபகுதியினுடாக சென்று பிரதான சுற்றுவட்டத்தினுடாக மன்னார் மாவட்ட செயலகத்தை அடைந்தது. இங்கு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் விதமாக கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் பின் மன்னார் மாவட்ட செயலாளர் எம்.வை.எஸ்.தேசபிரியவை அவரது அலுவலகத்தில் சந்தித்து மகஜர் ஒன்றிணை மன்னார் மாதர் அமைப்புகளின் ஒன்றியத்தின் இணைப்பாளர் மகாலட்சுமி கிருசாந்தன் வழங்கிவைத்தார்.
குறித்த மகஜர்கள் ஜனாதிபதி, சட்டமாதிபர்,பொண்கள் விவகார அமைச்சர் மற்றும் பொலிசார் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
குறித்த மகஜரில் பாலியல் வற்புணர்வு சம்பந்தமான வழக்குகளை துரிதப்படுத்தல், மாவட்ட ரீதியின் விசேட நீதிமன்றங்களை அமைத்து விரைவாக குற்றவழிகளை தண்டிக்கும் வகையில் தீர்ப்பிணை வழங்குதல், சட்டங்களை கடுமையாக்குதல், அரசாங்கம் பெண்களின் பிரச்சிணைகள் தொடர்பாக முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள்,மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை செபமாலை, அதன் செயலாளர் பீ.ஏ.அந்தோனி மார்க் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
n10








