சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பொதுச் செயலாளர் இலங்கை வருகிறார்
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பொதுச் செயலாளர் எல்ஹாச் அச் சீ மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அடுத்த மாதம் இலங்கை வரவுள்ளார்.
நாட்டில் நிலவிய நீண்ட கால யுத்தத்தையடுத்து இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரால், மேற்கொள்ளப்படும் மீட்பு வேலைத் திட்டங்களை அவர் இதன்போது பார்வையிடவுள்ளார்.
அத்துடன், அவர் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள மக்கள் மற்றும் இந்த வேலைத் திட்டங்களை முன்னெடுத்துவரும் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊழியர்களையும் சந்திக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் அவர் ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களையும் தனது விஜயத்தின் போது சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
n10




