செய்திகள்
ஹிருணிக்காவுக்கு நீதிமன்றத்தினால் கடும் எச்சரிக்கை
நீதிமன்றத்திற்கு உரியவகையில் கௌரவளிக்குமாறும் அவ்வாறு செய்யாவிட்டால் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் நடவடிக்கையெடுக்க நேரிடுமென கொழும்பு விசேட மேல் நீதிமன்த்தின் நீதியரசர்கள் குழழாமினால் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரவுக்கு கடுமையயாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாரத லக்ஷ்மன் கொலை தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றுக்கொண்டிருந்த போது ஹிருணிக்கா நீதிமன்றத்திற்குள் நுளையும் வேளையில் தல சாய்த்து நீதிமன்றத்திற்கு மரியாமை செலுத்தவில்லையென தெரிவத்தே அவருக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது கௌரவ நீதிமன்றம் , வழக்கு விசாரணை நடக்கும் போது நீதிமன்றத்தின் கெளரவத்தை பாதுகாக்கும் வகையில் நடந்துக்கொள்ள வேண்டும். அப்படி செய்ய முடியாவிட்டால் வழக்கு ஆரம்பிக்க முன்னரே உள்ளே வந்துவிட வேண்டும். என அவருக்கு அங்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது தான் தலை சாய்த்து மரியாதை செலுத்தினேன் ஏதேனும் தவறு நடந்திருந்தால் மண்ணிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். என ஹிருணிக்கா கூறியதை தொடர்ந்து சகல நடவடிக்கைகளையும் நீதிமன்றம் அவதானித்துக்கொண்டே இருக்கின்றது. என நீதியரசர்கள் குழாத்தினர் தெரிவித்துள்ளனர்.
n10




