செய்திகள்
2016ம் ஆண்டில் 227 வேலைத்திட்டங்களுக்கு சுமார் 889.70 மில்லியன் ரூபா நிதி தேவை
கிளிநொச்சி மாவட்ட கல்வி அபிவிருத்தி திணைக்களத்தினூடாக 2016ம் ஆண்டில் 227 வேலைத்திட்டங்களுக்கு சுமார் 889.70 மில்லியன் ரூபா நிதி தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தினூடாக 2010ம் ஆண்டின் பின்னரான மக்கள் மீள்குடியமர்வையடுத்து பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
புதிய 2016ம் ஆண்டில் 227 வேலைத்திட்டங்களுக்கு 889.70 மில்லியன் ரூபா நிதிதேவையென மாவட்ட செயலகத்திற்கு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள தேவைகள் தொடர்பான புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது 40 சிறிய நீர்ப்பாசனக் குளங்களின் அபிவிருத்தி வேலைகளுக்;கு 122 மில்லியன் ரூபாவும் 20 விவசாய வீதிகளின் வேலைகளுக்கு 48.80 மில்லியன் ரூபாவும் 36 வாய்க்காலின் வேலைகளுக்கு 88 மில்லியன் ரூபாவும் 16 நெற் களஞ்சியங்களுக்கு 96 மில்லியன் ரூபாவும் கமநலசேவை நிலையத்திற்குரிய கட்டடங்கள் மற்றும் மாவட்டக் காரியாலயத்திற்கு கட்டடம் ஆகிய 18 வேலைத்திட்டங்களுக்கு 66 மில்லியன் ரூபாவும் 39 விவசாயக்கிணறுகளுக்கு 157.50 மில்லியன் ரூபாவும் 27 உவர் நீர் தடுப்பணை வேலைத்திட்டங்களுக்கு 259.90 மில்லியன் ரூபாவும் 27 கமக்கார அமைப்புக்குரிய கட்டடங்;கள் அமைப்பதற்கு 40.50 மில்லியன் ரூபாவும் கமக்கார அமைப்புக்களுடைய ஏனைய கட்டடங்களின் எட்டு வேலைத்திட்டங்களுக்கு 22 மில்லியன் ரூபாவும் என 227 வேலைத்திட்டங்களுக்கு 889.70 மில்லியன் ரூபா நிதி 2016ம் ஆண்டின் அபிவிருத்தி திட்டங்களுக்கு தேவையென மதிப்பிடப்பட்டுள்ளது.
n10






