வவுனியாவில் சில்லறை தட்டுப்பாட்டால் மக்கள் அவதி
வவுனியா வர்த்தக நிலையங்களில் சில்லறைக் காசுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது.
வவுனியா மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் சில்லறைக் காசுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதால், பொருட்களை கொள்வனவு, விற்பனை செய்யும் போது பணப்பரிமாற்றத்தை சரியாக மேற்கொள்ள முடியவில்லை என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, சில்லறை காசு இன்மையால் பல வர்த்தக நிலையங்களில் மிகுதிப் பணத்திற்கு சொக்கிலேட், தீப்பெட்டி போன்றன வழங்கப்படுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தாம் சிலவேளைகளில் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
N5




