காணாமல் போன மகனைத் தேடிச் சென்ற தாய்க்கு வேலணையில் பரணகம ஆணைக்குழு வழங்கிய ‘ நீதி’
காணாமல் போனவர்களை கண்டறியும் பரணகம ஆணைக்குழு நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் வேலணையில் அமர்வுகளை நடத்தியபோது இராணுவத்தினரால் தனது ஒரு மகன் பிடித்துச் செல்லப்பட்டதாகவும் மற்றொரு மகன் கடற்படையினரால் சுட்டுக்கொள்ளப்பட்டதாகவும் கூறி ஒரு வயதுபோன தாய் அணு சென்று நீதி கேட்கிறார்.
இந்த ஆணைக்குழுவிடம் முறையிட்டால் காணாமல் போன தனது 19 வயது மகன் தொடர்பில் ஏதாவது செய்தி கிடைக்குமா என்று தான் இந்த தாய் அங்கு சென்றிருந்தார். ஆனால், இந்த தாயின் காணாமல் போன மகன் எப்படி எங்கே காணாமல் போனார் என்பதில் அணைக்குழு அதிகம் அக்கறை காட்டவில்லை. அவருக்கு ஏதாவது உதவிகள் கிடைத்தனவா என்று சில கேள்விகளை கேட்டுவிட்டு அவருக்கு ஒரு வீடு வழங்குவதற்கும் சமுர்த்தி நிவாரணம் வழங்குவதற்கும் ஆணையாளர் சிபார்சு செய்துள்ளதாக கூறி ” உதவிகள் கிடைக்க அதிகம் தாமதமானால் தம்முடன் தொடர்புகொள்ளுங்கள்” என்று கூறி அனுப்பிவைத்தனர்.
[youtube url=”https://www.youtube.com/watch?v=ZCcW4jKvVYU&feature=youtu.be” width=”500″ height=”300″]




