செய்திகள்
பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கு யாழ் மாவட்ட விவசாயிகள் நன்றி தெரிவிப்பு
யாழ்மாவட்டத்தில் தற்பொழுது உருளைகிழங்கு அறுவடை நடைபெற்று வருகின்றது கடந்த மாதம் யாழ்மாவட்ட உருளைகிழங்கு உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்கள் தாங்கள் விதைத்த உருளைகிழங்கு தற்பொழுது அறுவடை செய்யப்படுகின்ற காலம் அனால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும்உருளைகிழங்கிற்கான தீர்வை வரி குறைக்கப்பட்டுள்தால் உருளைகிழங்கின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
இதனால் யாழ் மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் தற்போதைய அறுவடைக்காலத்தில் தீர்வை வரி அரசாங்கத்தால் உயர்த்தப்பட்டால் நாடு பூராகவும் உருளைகிழங்கின் விலை அதிகரிக்கும் இதனால் விவசாயிகள் நன்மை அடைவார்கள் என்று தமது கோரிக்கையினை முன்வைத்தனர்.
இந்த விவசாயிகளின் கோரிக்கைகளை மேன்மைதங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அரசாங்கத்தின் இருக்குமதி வரியினை நள்ளிரவு முதல் அதிகரிக்க நடவடிக்கை எடுத்தார் இதனால் யாழ்மாவட்ட விவசாயிகளினால் அறுவடை செய்யப்படும் உருளைகிழங்கின் சந்தைபெருமதி 80 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமையால் விவசாயிகள் மகிழ்ச்சி ஆடைந்துளனர் இன்று காலை யாழ்மாவட்ட உருளைகிழங்கு உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனுக்கு நன்றி தெரிவித்தனர்.
n10




