செய்திகள்

மஹிந்த அணியின் புதிய கட்சியை அமைக்கும் பொறுப்பை ஏற்றுள்ள பஸில்

மஹிந்த அணியினரால் அமைக்கப்படவுள்ள புதிய கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுக்கும் பொறுப்புகளை முன்னாள் பொருளாதார அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ பெற்றுக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்படி அண்மையில் பத்தரமுல்லை பகுதியில் திறக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசியல் செயற்பாட்டு அலுவலத்தை பஸில் ராஜபக்‌ஷவே நடத்திசெல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை புதிய முன்னணியை அமைக்கும் வகையில் நாடு பூராகவும் தற்போது கூட்டங்கள் நடத்தப்படும் நிலையில் அந்த கூட்டங்களில் பஸில் கலந்துக்கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.