செய்திகள்

கண்டாவளைப் பிரதேசத்தில் இருபத்தி ஐயாயிரத்து 592 பேர் மீள்குடியேற்றம்

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்தில் எண்ணாயிரத்து 55 குடும்பங்களைச் சேர்ந்த இருபத்தி ஐயாயிரத்து 592 பேர் இதுவரை மீள்குடியேறியுள்ளதாக பிரதேச செயலாளர் ரீ.முகுந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேசத்த்தில் பிரதேச அபிவிருத்தி தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று (01-03-2016) கண்டாவளை பிரதேசத்த்தில் நடைபெற்றுள்ளது.
இதில் மீள்குடியேற்றம் தொடர்பாக கருத்துத் தெரிவித்;த கண்டாவளை பிரதேச செயலாளர் அவர்கள் கண்டாவளை பிரதேசத்திற்குட்பட்ட 16 கிராம அலவலர் பிரிவுகளிலும் சுமார் எண்ணாயிரத்து 55 குடும்பங்களைச் சேர்ந்த இருபத்தி ஐயாயிரத்து 592 பேர் வரையில் இதுவரை மீள்குடியேறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை இவ்வாறு மீள்குடியேறியுள்ள குடும்பங்களின் கூடுதலான குடும்பங்களின் பல்வேறுபட்ட தேவைகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளதாகவும் அவை படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தற்போது காணிப்பிரச்சனையே பாரிய பிரச்சனையாக காணப்படுகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
n10