செய்திகள்

வலது காலில் ஏற்பட்ட உபாதைக்கு இடது காலில் சத்திரச் சிகிச்சை செய்த வைத்தியர்கள் : பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

வலது காலில் முழங்கால் பகுதியில் ஏற்பட்ட ஊபாதைக்காக சிகிச்சைப் பெறுவதற்கு  வைத்தியசாலைக்கு சென்ற 14 வயது சிறுமிக்கு வைத்தியர்கள் இடது காலில் சத்திரச் சிகிச்சை செய்த சம்வமொன்று பேராதனை வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
கண்டி பகுதி பாடசாலையொன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியொருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவரின் தந்தையால் வைத்தியர்களுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 29ஆம் திகதி வலது காலில் ஏற்பட்ட உபாதைக்காக சிகிச்சை பெற்றுக்கொள்ள அந்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வைத்தியர்களோ வலது காலில் சத்திரச் சிகிச்சை மேற்கொள்ளாது இடது காலில் சத்திரச் சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். சத்திரச் சிகிச்சையின் போது சிறுமி மயக்க நிலையில் இருந்தமையால் அதனை அவர் அறிந்திருக்கவில்லையெனவும் சத்திரச் சிகிச்சையின் பின்னரே அதனை அவர் அறிந்துள்ளதாகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளன.
n10