பொலிவூட் நடிகைகளான ப்ரீத்தி ஜிந்தா மற்றும் பிபாஷா பாசு ஆகியோரின் திருமணத்தில் வில்லங்கம்..
பொலிவூட் நடிகைகளான ப்ரீத்தி ஜிந்தா மற்றும் பிபாஷா பாசு ஆகிய இருவரும் விரைவில் திருமணம் செய்ய முடிவெடுத்திருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியானது. இந்நிலையில், இவர்களது திருமண முடிவு தள்ளிவைக்கப்பட்டுள்ளது தகவல் வெளியாகியுள்ளது.
ப்ரீத்தி ஜிந்தாவுக்கு தற்போது 40 வயதாகின்றதுடன் பிபாஷா பாசுக்கு இப்போது 35 வயது. பிபாஷா பாசு, நடிகர் கரண் சிங் குரோவரை காதலித்து வருகிறார். ப்ரீத்தி ஜிந்தாவோ அமெரிக்காவை சேர்ந்த ஜீன் என்பவரை காதலிக்கிறார்.
தனது திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்துவதன் காரணமாக பிபாஷா, திருமணத்தை பற்றி இப்போது யோசிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ப்ரீத்தி ஜிந்தா, திருமணத்துக்கு சம்மதம் சொல்லிவிட்ட நிலையில், அவர் காதலிக்கும் அமெரிக்காவை சேர்ந்த மாப்பிள்ளை சில மாதங்கள் போகட்டும் என்று கூறியிருப்பதால் திருமணம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
N5




