செய்திகள்

அரசாங்கத்தின் நன்பகத்தன்மையில் சந்தேகம் வலுக்கின்றது

இன்றைய நல்லாட்சி என்று சொல்லப்படும் கூட்டாட்சி அரசாங்கத்தில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு வெறும் பேச்சளவிலேயே தென்படுகின்றது. மாறாக தமிழ் மக்கள் சார்பாக அளிக்கப்பட்ட எவ்வித வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாமல் நன்பகத்தன்மையற்றதாக தென்படுகின்றது என முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும்,

தேர்தல் நேரத்தில் புதிய புதிய அரசாங்கம் சார்பாக வழங்கப்பட்ட வாக்குறுதியில் எதனையும் இவ் அரசாங்கம் நிறைவேற்றவில்லை. இன்று தமிழ் அரசியல் கைதிகள் சம்பந்தமாக அரசாங்கத்திற்குள்ளே பல விதமான கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றது. ஒரு சில அமைச்சர்கள் அரசியல் கைதிகள் எவருமே இல்லை என்று தெரிவிக்கின்றன. மறு பறம் அரசில் உள்ள தமிழ் தலைமைகள் அரசியல் கைதிகளைவிடுவிக்க வேண்டும் என்று பேச்சளவிலேயே பேசுகின்றார்கள். அரசாங்கத்திற்கு மறைமுக ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசியல் கைதிகள் சம்பந்தமாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளாமல் காலத்தை கடத்துகின்றனர்.

சம்பூர் அனல் மின் நிலையம் சம்பந்தமாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பொழுது வெறுமனே வாக்குறுதிகள் அளித்து ஆர்ப்பாட்டங்களை முடித்து வைக்கின்றார்கள். இதே போன்று பல வாக்குறுதிகளை ஆளும் அரசாங்கமுமு; சரி தமிழ் தேசிய கூட்டமைப்பனரும் சரி பேச்சளவிலேயே வழங்கி வருகின்றனர். கடந்த காலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் சர்வதேச விசாரணை பொறிமுறைக்குள் விசாரிக்கப்பட வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் தெரிவிக்கின்றார். அது அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க உட்பட ஏனைய பல அமைச்சர்கள்இதனை கடுமையாக எதிர்க்கின்றனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவற்றை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறாரே ஒளிய தீர்மானமாக எதனையும் தெரிவிப்பதில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டில் ஒவ்வொரு இடத்தில் வெவ்வேறான கருத்துக்களை தெரிவிக்கின்றார். நாட்டின் பொருளாதாரம் மந்த கதியில் தள்ளாடிக் கொண்டிருக்கின்றது.

பல தசாப்தங்களாக உள்ள தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனைக்காண எந்தவொரு தீர்வினையும் அரசாங்கம் முன்னெடுத்ததாக தெரியவில்லை. மாறாக அரசியலமைப்பு திருத்தம் சம்பந்தமாகவும் தேர்தல் முறை திருத்தம் சம்பந்தமாகவும் அரசியல் கட்சிகளினதும் மக்களினதும் கருத்துகளை பெறுகின்றோம் என்று கால தாமதத்தை தான் செய்து வருகின்றார்கள். சுதந்திர தினத்தில் தேசிய கீதத்தை தமிழில் இசைத்து விட்டு தமிழ் மக்களுக்கு நியாயத்தை வழங்கியதைப் போன்ற ஒரு மாயையை ஏற்படுத்துகின்றார்கள். இதற்கு தமிழ் தலைமைகளும் துணை போகின்றார்கள். அவ்வப்பொழுது முன்னைய அரசாங்கத்தின் ஊலழ்களையும் கொள்ளை கொலை குற்றங்களையும் தலைப்பு செய்தியாக்கி தமிழ் மக்களை திசை திருப்பி விடுகின்றார்கள். முன்னைய அரசாங்கத்தின் ஊலழ்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது அவசியமானது ஒன்றாகும்.

n10