செய்திகள்

சட்டவிரோத பொருளாதார குடியேறிகளுக்கு ஐரோப்பாவில் இடமில்லை

பொருளாதார காரணங்களுக்காக, சட்டவிரோத குடியேறிகளாக ஐரோப்பாவினுள் வர வேண்டாம் என, ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் டஸ்க் நேரடி வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

மனிதக் கடத்தல்காரர்களை நம்பக்கூடாது எனத் தெரிவித்த அவர், பணத்தையும் உயிரையும் அவர்கள் பணயம் வைக்கக்கூடாது என கேட்டுக் கொண்டார்.

சட்டவிரோத குடியேறிகள் இனிமேல் கிரேக்கத்தை கடந்து செல்ல முடியாது என, ஏதென்சில் பேசியபோது டஸ்க் தெரிவித்தார். அதே நேரத்தில் ஐரோப்பிய நாடுகள், பிற ஐரோப்பிய நாடுகளுடனான தங்கள் எல்லைகளை தன்னிச்சையாக மூடக்கூடாது என்றும் அவர் கூறினார்.

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள், கடவுச் சீட்டு கட்டுப்பாடுகளின்றி ஐரோப்பாவினுள் பயணிக்கும் ஷெங்கன் முறைமையை மீண்டும் பின்பற்றுவதுடன், தமது வெளி எல்லைகளில் கடுமையான சோதனைகளை கடைப்பிடிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

n10