செய்திகள்

கொழும்பில் நிலத்திற்கு மேல் தூண்களின் மீது புதிய நெடுஞ்சாலைகளை அமைக்க தீர்மானம்

பத்தரமுல்லை, மாலபே, அதுருகிரிய மற்றும் வெளிச் சுற்றுவட்ட நெடுஞ்சாலை ஆகியவற்றை இணைக்கும் புதிய களணிப் பாலத்திலிருந்து ராஜகிரி வரையில் நிலமட்டத்திற்கு மேல் தூண்களின் மீது  புதிய நெடுஞ்சாலையொன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொழும்பு நகரம், அதன் சுற்றுப்புற பிரதேசங்களில் மற்றும் கடுகதிப்பாதைகள் ஆகியவற்றிற்கிடையிலான தொடர்பினை மேம்படுத்தும் நோக்குடனும் மற்றும் கொழும்பு நகர பிரதேசத்தில் காணப்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதன் பொருட்டும் கொழும்பில் நிலமட்டத்திற்கு மேல் தூண்களின் மீது நிறுவப்படும் நெடுஞ்சாலை வலையமைப்பினை நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
இவ்லையமைப்பின் கீழ் புதிய களனிப் பாலத்தில் ஆரம்பித்து ராஜகிரியவில் முடிவடையும் 6.9 கி.மீ. நீளமுடைய நான்கு ஒழுங்குகளைக் கொண்ட நிலமட்டத்திற்கு மேல் தூண்களின் மீது நிறுவப்படும் நெடுஞ்சாலை ஒன்றினை நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலையானது 2 ஆம் கட்டத்தில் அதுருகிரியவில் வெளிச் சுற்றுவட்டம் நெடுஞ்சாலையை இணைக்கும் பொருட்டு தெற்குப் புறமாக நீடிக்கப்படும்.
முன்மொழியப்பட்டுள்ள நிலமட்டத்திற்கு மேல் தூண்களின் மீது நிறுவப்படும் இந்த நெடுஞ்சாலையின் வடக்கு முடிவானது புதிய களணிப் பாலத்திற்கருகில் கொழும்பு கட்டுநாயக்க கடுகதிப்பாதையை இணைக்கவிருக்கின்றது. அதனடிப்படையில் இவ்வேலைத்திட்டத்தின் முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
n10